Koha home

Online Catalogue of Public Library Batticaloa
மட்டக்களப்பு பொது நூலகத்தின் இணைய நூற்பட்டியல்


மட்டக்களப்பு பொது நூலகமானது கிழக்கு மாகாணத்தில் உள்ள மிகப்பெரிய மற்றும் பழமை வாய்ந்த ஒரு நூலகமாகும். இது 1855ம் ஆண்டில் நிறுவப்பட்டது. தற்போது சுமார் 60,000 க்கும் மேற்பட்ட நூல்களை தமிழ், சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் கொண்டிருப்பதுடன் மட்டக்களப்பு பற்றிய அரிய நூற் சேகரிப்புகளையும் இப்பிரதேசத்தைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளா்களின் நூல்களின் தொகுப்புக்களையும் கொண்டுள்ளது. மேலும் மட்டக்களப்பு பொது நூலகமானது கல்லடி மற்றும் புத்தூர் ஆகிய இடங்களில் தரம் III நிலையில் உள்ள இரு நூலகங்கள் உட்பட 12 கிளை நூலகங்களை கொண்டுள்ளதுடன் நகரத்தில் உள்ள சுமார் 90.000 இற்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு தேவையான தகவல் சேவைகளை வழங்கிவருகின்றது. இந் நூலகம் சுமார் 13,000 அங்கத்தவா்கள் கொண்டுள்ளதுடன் ஒரு நாளைக்கு சராசரியாக 250 பயனர்கள் நூலகத்திற்கு வருகை தருவது குறிப்பிடதக்கது.

நவீன சகாப்தத்தில் தற்போதுள்ள விரைவான தகவல் அணுகுகை மற்றும் தகவல் பாவனை போன்றவற்றிற்கு ஈடுகொடுப்பதுடன் டிஜிட்டல் நூலக சேவைகளை பொது மக்களுக்கு வழங்குமுகமாக இவ் நூலகத்தில் தானியங்கு நூலக சேவை வசதிகள் உருவாக்கப்பட்டிருப்பதுடன் நவீன இலத்திரனியல் சாதனங்களும் பொருத்தப்பட்டுள்ளது. இவ் டிஜிட்டல் நூலக சேவைகள் இலங்கை தேசிய நூலகம் மற்றும் தகவல் தொடா்பாடல் தொழில்நுட்ப முகவா் நிறுவனம் (ஐ.சி.டி.ஏ). ஆகியவற்றினால் கூட்டாக “டிஜிட்டல் நூலகங்கள் திட்டத்தின்" கீழ் அமுல்படுத்தப்பட்டுள்ளது.

The Batticaloa Public Library is the largest and old library in the eastern province. It was founded in 1855 and currently holds more than 60,000 books in Tamil, Sinhala and English languages. In addition the library consist rare collection about Batticaloa and the collection of books written by legendary authors from Batticaloa. The library has 12 branches including two grade III libraries in Kallady and Puthur and providing information services for more than 90.000 public in the city. The library has around 13,000 members and average 250 users visit per day.

To address the rapid change on information access and usage in this modern era, the library has automated and equipped with modern devices to provide digital library services for the public under "Digital Libraries Project" which is jointly implemented by National Library & Documentation Broad and Information Communication Technology Agency (ICTA) of Sri Lanka .

Log in to your account:
DLP Logo

Other Useful Links:
 

Copyright © 2018, Batticaloa Public Library
Developed & Customized by: M Norman Ravikumar ,Consultant for Digital Libraries Project, Project Management Unit, NLDSB

Powered by Koha